டெல்லி: மத்தியஅரசு, வரலாற்று ஆவனங்களையும் தனியாருக்கு தாரைவார்க்க இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பொதுத்துறை சொத்துக்களை தனியாரிடம் தாரை வார்த்து வரும் மோடி தலைமையிலான மத்தியஅரசு, தற்போது வரலாற்று ஆவணங்களையும் தனியாருக்கு தாரை வார்க்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
எல்ஐசி, ஏர்இந்தியா, துரைமுகங்கள், விமான முனையங்கள், ரயில்வே என ஏராளமான பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்து வரும் மோடி அரசு, நாட்டின் பொக்கிஷமான வரலாற்று ஆவணங்களையும் தனியாருக்கு விற்பனை செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.
100ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்ட ஆல்இந்தியா ரெடியோ, தூர்தர்ஷன் போன்றவற்றை தொடர்ந்து நடத்த ஆர்வம் காட்டாத மத்தியஅரசு, அவைகளை படிப்படியாக மூடி வருகிறது. ஏற்கனவே பல ரேடியோ நிலையங்கள் மூடப்பட்டுவிட்ட நிலையில், விரையில் அனைத்து ரேடியோ நிலையங்களும் மூட உள்ளது. அதுபோல, அரசின் தொலைக்காட்சி ஊடகமான தூர்தர்ஷனையும் மூட உத்தேசித்துள்ளது.
இதன் ஒரு பகுதியாக சுதந்திரத்துக்கு முன்பு உள்ள வரலாற்று சிறப்பு மிக்க ஆவணங்கள், சுதந்திரம் பெற்ற பிறகு நடைபெற்ற முதல் பாராளுமன்ற கூட்டத்தின் விவாதங்கள் உள்பட தொலைக்காட்சி, ரேடியோவில் ஒளிபரப்பப்பட்ட நிகழ்வுகள் குறித்த ஆவணங்கனை, தனியார் தொலைக்காட்சிகளுக்கு விற்பனை செய்ய முயற்சி செய்வதாக, அதன்மூலம் கோடிக்கணக்கில் பணத்தை ஈட்ட அரசு முடிவு செய்துள்ளதாகவும், அதற்கான நடைமுறைகள் தொடங்கப்பட்டு இருப்பதாகவும் பிரசார்பாதி தலைவர் சசிசேகர் தெரிவித்து உள்ளார்.
மோடி அரசின் தனியார் மயமாக்கும் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன.