மலையாளத்தில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த திரைப்பட கலைஞர்களுக்கான விருதை கேரள அரசு அறிவிப்பது வழக்கம். அந்த வகையில் கடந்த 2020-ஆம் ஆண்டுக்கான 51-வது கேரள திரைப்பட விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன.
நடிகை சுஹாசினி மணிரத்னம் தலைமையிலான தேர்வு குழுவினர் சிறந்த திரைப்பட கலைஞர்களை தேர்வு செய்துள்ளனர்.
இதில் கடந்த ஆண்டு நேரடியாக ஓடிடியில் வெளியாகி விமர்சகர்கள் மத்தியில் பாராட்டுக்களை குவித்த ’தி கிரேட் இந்தியன் கிச்சன்’ திரைப்படம் சிறந்த திரைப்படம் உட்பட மூன்று பிரிவுகளில் விருதுகளை வென்றுள்ளது. சிறந்த திரைக்கதை மற்றும் சிறந்த ஒலி வடிவமைப்பு ஆகிய விருதுகளையும் கைப்பற்றியுள்ளது.
வெள்ளம் திரைப்படம் பிரபல மலையாள நடிகர் ஜெயசூர்யா சிறந்த நடிகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கப்பெல்லா படத்தில் நடிகை ஆனா பென் சிறந்த நடிகைக்கான விருதை தட்டிச் சென்றுள்ளார்.
அய்யப்பனும் கோஷியும் திரைப்படம் சிறந்த பிரபலமான திரைப்படம், சிறந்த பெண் பின்னணி குரல் மற்றும் சிறந்த பாடகிக்கான சிறப்பு விருது உட்பட மூன்று விருதுகளை வென்றுள்ளது.
சூஃபியும் சுஜாதையும் திரைப்படம் சிறந்த இசை, சிறந்த பின்னணி இசை, சிறந்த பின்னணி பாடகி, சிறந்த ஒலிக்கலவை மற்றும் சிறந்த நடனம் என இசைக்கான பிரிவில் 5 முக்கிய விருதுகளை வென்று குவித்துள்ளது.
தொழில்நுட்பப் பிரிவில் சிறந்த ஒளிப்பதிவுக்கான விருதை kayattam படமும் சிறந்த படத்தொகுப்புக்கான விருதை சி யு சூன் படமும் சிறந்த கலை வடிவமைப்புக்கான விருதை மாலிக் படமும் கைப்பற்றியுள்ளன. மேலும் என்னிவர் திரைப்படத்தை இயக்கிய சித்தார்த் சிவா சிறந்த இயக்குனராகவும் கப்பெல்லா படத்தை இயக்கிய முகமது முஸ்தபா சிறந்த அறிமுக இயக்குனராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.