
செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் படத்தை தாணு தயாரிக்க, தனுஷ் நடிக்கிறார். இதில் நாயகியாக இந்துஜா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
காதல் கொண்டேன், 7 ஜி ரெயின்போ காலனி போன்ற மாஸ்டர் பீஸ்களில் செல்வராகவனுடன் இணைந்து நின்ற யுவன் நானே வருவேனில் மீண்டும் இணைந்திருக்கிறார்கள். ஒளிப்பதிவாளராக யாமினி யாக்னமூர்த்தி பணிபுரிந்து வருகிறார்.
தனுஷ் – செல்வராகவன் கூட்டணிக்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு. இவர்கள் கூட்டணியில் வெளியான காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.
இதன் போட்டோ ஷூட் பணிகள் முன்பே முடிவடைந்துவிட்டன. தனுஷின் தேதிகளுக்காகக் காத்திருந்தது படக்குழு. இன்று தொடங்கப்பட்டும் படப்பிடிப்பு தொடர்ச்சியாக நடைபெறவுள்ளது.
[youtube-feed feed=1]இடைவிடாத படப்பிடிப்பு இனிதே ஆரம்பம்! #NaaneVaruven @selvaraghavan @dhanushkraja @thisisysr pic.twitter.com/JsaezKNvek
— Kalaippuli S Thanu (@theVcreations) October 16, 2021