டில்லி

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவின் 13 ஆம் பிரதமர் ஆன மன்மோகன் சிங் 1932 ஆம் ஆண்டு பிறந்தவர் ஆவார்.  இவர் தற்போது பாகிஸ்தானில் உள்ள கா என்னும் ஊரில் பிறந்தார்.   இவர் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் ஆவார்.

இவருக்குக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.  மேலும் மூச்சுத் திணறலும் அதிகமாக உள்ளது.  இதையொட்டி அவர் டில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.