டில்லி

ந்தியாவில் நேற்று 16,020 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,40,00,500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16,200 அதிகரித்து மொத்தம் 3,40,00,500 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 229 அதிகரித்து மொத்தம் 4,51,220 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 22,843 பேர் குணமாகி  இதுவரை 3,33,35,301 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 2,00,872 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 2,069 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 65,81,677 ஆகி உள்ளது  நேற்று 43 பேர் உயிர் இழந்து மொத்தம் 1,39,621 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 3,616 பேர் குணமடைந்து மொத்தம் 64,07,936 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 30,525 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 7,823 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 48,09,619 ஆகி உள்ளது.  இதில் நேற்று 106 பேர் உயிர் இழந்து மொத்தம் 26,448 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 12,490 பேர் குணமடைந்து மொத்தம் 46,85,932 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 96,710 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 332 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 29,81,732 ஆகி உள்ளது  இதில் நேற்று 11 பேர் உயிர் இழந்து மொத்தம் 37,906 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 515 பேர் குணமடைந்து மொத்தம் 29,34,085 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 9,712 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 1,289 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 26,80,857 ஆகி உள்ளது  இதில் நேற்று 18 பேர் உயிர் இழந்து மொத்தம் 35,814 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,421 பேர் குணமடைந்து மொத்தம் 26,29,201 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 15,842 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர பிரதேச மாநிலத்தில் நேற்று 503 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 20,58,065 ஆகி உள்ளது.  நேற்று 12 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 14,268 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 817 பேர் குணமடைந்து மொத்தம் 20,36,865 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 6,932 பேர் சிகிச்சையில் உள்ளனர்.