தமிழ் சினிமாவின் வெண்ணிற ஆடை என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் ஸ்ரீகாந்த்.

அதன் பின்னர் சிவாஜிகணேசன், எம்ஜிஆர், முத்துராமலிங்கம், ஜெய்சங்கர், ரஜினி, கமல் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

நாகேஷ், வாலி ஆகியோர் திரையுலகில் ஒளிர துணையாக நின்றவர், ஜெயலலிதாவின் முதல் கதாநாயகன், ஜெயகாந்தனின் நெருங்கிய நண்பர், மிகச் சிறந்த ஆங்கில, தமிழ் இலக்கிய வாசகர். நாடக மேடையிலும், வெள்ளித் திரையிலும் மிளிர்ந்த நடிகர் ஸ்ரீகாந்த் மறைந்தார்.

இவருக்கு தற்போது 82 வயதாகிறது. இந்த நிலையில் வயது முதிர்வு மற்றும் உடல்நல குறைபாடு காரணமாக இவர் இன்று உயிரிழந்தார். இவருடைய மறைவு திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

[youtube-feed feed=1]