கரூர்: பருவ மழையை எதிர்கொள்ள தமிழகஅரசு தயாராக உள்ளதாக கரூரில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

“தூய்மை கரூர்”- ஒரு வார்டு ஒருநாள் முகாம் என்ற அடிப்படையில் கரூர் நகராட்சி முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. இந்த பணியை அமைச்சர் செந்தில்பாஜி நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது,  கரூர் நகராட்சி வார்டுகளில் உள்ள  3 ஆயிரத்து 580 தெருவிளக்குகளில்,  1575 தெருவிளக்குகள் பழுது நீக்கப்பட்டுள்ளன.  மேலும், 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2ஆயிரத்து 300 புதிய தெருவிளக்குகள் அமைப்பதற்கான நடவடிக்கைக்கள் எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

மேலும், பருவ மழையை எதிர்கொள்வதற்கு மின்சாரத்துறை தயாராக உள்ளதாகவும், அதற்கு தேவையான  மின் கம்பங்கள், மின் தளவாடங்கள் தயாரான நிலையில் இருக்கின்றன என்று கூறியவர்,  இனி வரக்கூடிய காலங்களில் சூரிய மின்சக்தி மூலம் மின் உற்பத்தி ஏற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகவும்,   அனல் மின்நிலையங்கள் மூலம் 4 ஆயிரத்து 200 மெகாவாட் மின் உற்பத்தி கிடைக்கும் என்ற நிலையில் ஆயிரத்து 800 மெகாவாட் உற்பத்தி மட்டுமே கிடைத்து வருகிறது என்று தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது கரூர் நகராட்சி ஆணையாளர் ராமமூர்த்தி, நகர்நல அலுவலர் லட்சியவர்ணா, கரூர் கிழக்கு நகர திமுக பொறுப்பாளர் கோல்ட்ஸ்பாட் ராஜா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.