சென்னை

மிழகத்தில் உள்ள 32 சுங்கச்சாவடிகளை அகற்றக் கோரி அமைச்சர் வேலு டில்லிக்குச் சென்றுள்ளார்.

தற்போது தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 48 சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு அதன் வழியாகச் செல்லும் வாகனங்களில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.    ஆனால் மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும்போது தமிழகத்தில் வெறும் 16 சுங்கச்சாவடிகள் மட்டுமே இருக்க வேண்டும் என கூறப்பட்டது.

இதையொட்டி தமிழக சட்டப்பேரவையில் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர். 32 சுங்கச் சாவடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார்.  இந்நிலையில் நேற்று மாலை அமைச்சர் வேலு டில்லி சென்றுள்ளார்.  அவருடன் தமிழக நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளும் சென்றுள்ளனர்.  இன்று அமைச்சர் வேலு மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை சந்திக்க உள்ளார்.

அப்போது வேலு 32 சுங்கச்சாவடிகளை அகற்றக் கோரிக்கை விடுக்க உள்ளார்.   சென்னையில் மதுர வாயல் – துறைமுகம் இடையே மேம்பாலச் சாலையை இரண்டடுக்கு மேம்பால சாலையாக மாற்றக் கட்டுமானப் பணிகள் தொடங்க உள்ளன.  இதை விரைவில் தொடங்குவது குறித்தும் தேசிய நெடுஞ்சாலை மேம்பாடு குறித்தும் நிதின் கட்கரியுடன் வேலு பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.