டெல்லி: உத்தரகாண்ட் மாநில பாஜக அமைச்சர், ராகுல் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.,\ இது பாஜக தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
2022ம் ஆண்டு தொடக்கத்தில் உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், பஞ்சாப், கோவா மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில்3 மாநிலங்களில் பாஜக ஆட்சி நடைபெற்ற வருகிறது. பஞ்சாபில் காங்கிரஸ் ஆட்சியும், மணிப்பூரில் முதலில் பாஜக ஆட்சி அமைத்த நிலையில், பின்னர் காங்கிரஸ் கட்சி ஆதரவுடன், மக்கள் முன்னணி ஆட்சி அமைத்துள்ளது. இந்த 5 மாநிலங்களிலும் ஆட்சியை கைப்பற்றி தேசிய கட்சிகள், மாநிலங்கள் இப்போதே களத்தில் இறங்கி உள்ளன. அதன்படி மாநில முதல்வர்கள் மாற்றத்தை பாஜக நடத்தி உள்ளது. அரசியல் அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. கட்சிக்குள் மாற்றம் மட்டுமின்றி மாற்று கட்சியினரை இழுக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.
இந்த நிலையில், உத்தராகண்ட் பாஜக மாநிலஅரசில் இடம்பெற்றிருந்த போக்குவரத்து துறை அமைச்சர் யஷ்பல் ஆர்யா மற்றும் அவரது மகன் சஞ்சீவ் ஆர்யா எம்எல்ஏ ஆகியோர் பிஜேபியில் இருந்து விலகுவதாக அறிவித்தனர். அதைத்தொடர்ந்து, இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து தங்களை காங்கிரசில் இணைந்துக்கொண்டுள்ளனர். இந்த நிகழ்ச்சியில், உத்தரகாண்ட் மாநில காங்கிரஸின் முன்னாள் முதல்வர் ஹரிஷ் ராவத் உடனிருந்தார்.