1972 ஆம் ஆண்டு இன்றுதான் எம்ஜிஆர் திமுகவிலிருந்து நீக்கப்பட்டார்.
தகவல் அறிந்ததும், “கேட்பதற்கே சந்தோசமாக இருக்கிறது. காய்ச்சுங்கடா பாயாசத்தை” என்று சொன்னவர் அவர்.
அன்று முதல் அவருடைய அரசியல் எதிரிகள் இரண்டு முரட்டு உருட்டுகளை உருட்டிக் கொண்டிருப்பார்கள்..
ஒன்று இந்திரா காந்தியின் ரெய்டுக்கு பயந்து அவர் கட்சியை விட்டு வெளியேறத்துடித்தார்..
நாடோடி மன்னன் படத்தில் மன்னனாக வரும் எம்ஜிஆரிடம் அவருடைய அவருடைய மனைவி கேட்பார்.. உங்களுக்கு ஜாதகத்தில் ஏதோ கோளாறு என்று குருநாதர் சொல்கிறாரே?
அதற்கு எம்ஜிஆர்,”குருநாதர் தன் வயிற்றுப் பிழைப்புக்காக எதையாவது சொல்லிக் கொண்டிருப்பார்” என்று ஒரே போடாக போட்டு விட்டுப் போவார்.
எம்ஜிஆர் பயந்து போனார் என்று சொன்னதை கேட்கும் போதெல்லாம் இந்த டயலாக் தான் ஞாபகம் வருகிறது.
இன்னொன்று,கணக்கு காட்ட வேண்டிய பொருளாளரே கணக்கு கேட்டார் என்று..
திமுக பொருளாளராக இருந்த எம்ஜிஆர் கணக்கு கேட்டது கட்சியின் கணக்கு அல்ல..
“இந்த ராமச்சந்திரனுக்கு சொத்துக்கள் இருக்கின்றன என்றால், நான் ஒரு முன்னணி நடிகன். நான் சம்பாதித்து சொத்து சேர்த்து இருக்கிறேன். ஆனால் கட்சிகாரர்களுக்கும் அவர்களின் உறவினர்களுக்கும் திடீரென எப்படி சொத்துக்கள் குவிந்தன. அந்த கணக்கை காட்டத் தயாரா?”
இப்படித்தான் எம்ஜிஆர் கேட்டார்.. ஆனால் எம்ஜிஆர் என்னமோ கட்சி கணக்கை கேட்டது மாதிரி திருப்பி விட்டு விட்டார்கள். அது இன்னமும் அப்படியே சுற்றிக் கொண்டிருக்கிறது..
வந்தான்.. வென்றான்.. சென்றான்..
– நெட்டிசன் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு