மும்பை:
உலகக்கோப்பை டி20 : வெற்றி பெறும் அணிக்கான பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்நிலையில், டி20 உலகக் கோப்பைக்கான பரிசுத் தொகையைச் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.
இதுகுறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில், சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு 12 கோடி ரூபாயும், வழங்கப்படும். இறுதிப்போட்டியில் தோல்வியடைந்து 2வது இடம் பிடிக்கும் அணிக்கு 6 கோடி ரூபாயும் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரையிறுதியில் தோல்வியடையும் இரண்டு அணிகளுக்கு தலா ரூ.3 கோடியும், ஒட்டுமொத்தமாக, டி20 உலகக் கோப்பை போட்டிக்கு ரூ.42 கோடி ஒதுக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel