சென்னை
இன்றும் 17 ஆம் தேதியும் சில சென்னை புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இன்றும் 17 ஆம் தேதியும் பராமரிப்பு பணிகள் காரணமாக சில புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையின் விவரம் பின் வருமாறு :
இன்றும் மற்றும் 17 ஆம் தேதியும் புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. அதாவது சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே காலை 11, 11.30, 11.45, 12.20, 12.40, 1.40, 2.30 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
தாம்பரம் – சென்னை கடற்கரை இடையே காலை 11.30, 12.10, 12.30, 1.50, 2.50, 3.30 க்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் இன்று மற்றும் 17ம் தேதி ரத்து செய்யப்படுகிறது.
இன்றும் 17 ஆம் தேதியும் திருமால்பூர் – சென்னை கடற்கரை இடையே காலை 10.40 மணிக்கு இயக்கப்படும் பணியாளர் சிறப்பு ரயில் ரத்து செய்யப்பட்டு 1.50 மணிக்கு இயக்கப்பட உள்ளது.
இதைப் போல் சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையே காலை 11.15, 12, 1.20, 2, 3 ஆகிய மணிகளுக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் இன்று மற்றும் 17ம் தேதி சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே இயக்கப்படுகிறது.
மேலும் கடற்கரை – அரக்கோணம் – கடற்கரை பிற்பகல் 1 மணி ரயில் சென்னை கடற்கரை மற்றும் தாம்பரம் இடையே இயங்க உள்ளது.
தவிர செங்கல்பட்டு – கடற்கரை இடையே காலை 10.15, 11, 12.25, 1.25, 2.15 ஆகிய மணிகளுக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் இன்று மற்றும் 17ம் தேதி தாம்பரம் – சென்னை கடற்கரை இடையே இயக்கப்படுகிறது.