சென்னை:
நெகிழி பயன்பாட்டை ஒழிக்கும் தமிழக அரசின் முயற்சிகளுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்றம் நீதிபதிகள் தெரிவிக்கையில், நெகிழி பயன்பாடு மீதான தடையை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், நெகிழி ஒழிப்பில் அனைத்து மாநிலங்களிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லாவிட்டால் பயன்பாடு தொடர்ந்து கொண்டே இருக்கும் என்றும் தெரிவித்தனர்.
தொடர்ந்து பேசிய நீதிபதிகள், நெகிழி ஒழிப்பு கூட்டத்திற்குப் பிறகு எடுத்த நடவடிக்கைகள் என்ன என்று மத்திய அரசுக்குக் கேள்வி எழுப்பியுள்ளனர்.