சென்னை: 
ஜெயலலிதா, சசிகலாவுக்குச் சொந்தமான வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
வரிப்பாக்கி நிலுவையில் உள்ள நிலையில், ஜெயலலிதா, சசிகலாவுக்குச் சொந்தமான  கொடநாடு, கர்சன் எஸ்டேட் வங்கிகளை வருமான வரி துறையினர் முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதுகுறித்து வெளியான தகவலில், வருமான வரி கணக்கைக் குறைத்துக் காட்டியதால், ஜெயலலிதா, சசிகலாவுக்குச் சொந்தமான கோத்தகிரி பேங்க் ஆப் இந்தியா வங்கியில் வைக்கப்பட்டிருந்த இரண்டு எஸ்டேட் வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.