சென்னை: பாலியல் புகாரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுஷில்ஹரி பள்ளி தலைவர் சிவசங்கர் பாபாவின் நீதிமன்ற காவலை அக்டோபர் 22ம் தேதி வரை (15 நாட்கள்) நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கேளம்பாக்கம் பகுதியில் செயல்பட்டு வந்த சுசில்ஹரி சிபிஎஸ்இ பள்ளி நிறுவனம் சிவசங்கர் பாபா, அங்கு படித்து வந்த பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர்மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் பாலியல் புகாரில் சிறையிலுள்ள சிவசங்கர் பாபாவின் நீதிமன்ற காவலை அக்டோபர் 22ம் தேதி வரை நீடித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சிவசங்கர் பாபா தொடர்பாக மேலும் விசாரணை நடத்த வேண்டிய இருப்பதாக காவல்துறையினர் கூறியதைத் தொடர்ந்து அவரது காவலை மேலும் 15நாட்கள் நீட்டித்து, மீண்டும் 22ம் தேதி ஆஜர்படுத்தசெங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.