சென்னை

ரசின் விதிகளை மீறி தமிழகத்தில் ஏற்கனவே ஒன்று முதல் 8 ஆம் வகுப்புக்களுக்குப் பள்ளிகள் தொடங்கி உள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

மாதிரி புகைப்படம்

கொரோனா பாதிப்பு காரணமாகத் தமிழகத்தில் கடந்த வருடம் மார்ச் முதல் அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டன.  தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.  இதையொட்டி தமிழகத்தில் மருத்துவ நிபுணர்கள் ஆலோசனைக்குப் பின் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்டன.

தற்போது நவம்பர் ஒன்றாம் தேதி முதல் ஒன்று முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்குப் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் சில தனியார்ப் பள்ளிகள் தற்போதே ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களைப் பள்ளிகளுக்கு வரவைப்பதாகப் புகார் எழுந்துள்ளது.

தமிழக பெற்ரோர் மாணவர் நலச் சங்கத்தைச் சேர்ந்த அருமை நாதன். கட்டணம் வசூலிக்க வேண்டும் என்ற நோக்கிலேயே பள்ளிகள் திறக்கப்படுவதாகக் குற்றம்சாட்டி உள்ளார்.  கல்வியாளர் நெடுஞ்செழியன், “இதற்கு மாணவர் நலன் பின்னுக்குத் தள்ளப்பட்டு பொருளாதாரம் முன்னிலைப்படுத்தப்படுவதும் காரணம்” எனக் கூறி உள்ளார்.

 சமூக ஆர்வலர்கள், ”நாட்டில் கொரோனா நெருக்கடியை அனைவரும் எதிர்கொண்டுள்ள நிலை உள்ளது.  தற்போது பாடத்திட்டமே குறிக்கோள் என்று செயல்படாமல் குழந்தைகள் உடல் நலன் மற்றும் கொரோனா பாதுகாப்பு வழிகளைப் பின்பற்ற வேண்டியது அவசியம்” எனக் கருத்து தெரிவித்துள்ளனர்.