கொல்கத்தா: மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பவானிபூர் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற நிலையில், இன்று எம்எல்ஏவாக பதவி ஏற்றார்.
மேற்குவங்க சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட, பாஜக வேட்பாளரிடம் நந்திகிராம் தொகுதியில் தோல்வியை சந்தித்த நிலையிலும், கட்சி பெற்ற அமோக வெற்றி காரணமாக முதல்வராக பதவி ஏற்றார். இதனால், அடுத்த 6 மாதத்திற்குள் எம்எல்ஏவாக பதவி ஏற்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதையடுத்து, மம்தா போட்டியிடும் வகையில், பவானிபூர் தொகுதி திரிணாமுல் எம்.எல்.ஏ., சோபன்தே தனது பதவியை ராஜினாமா செய்ததால், அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, செப்டம்பர் 30-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.
இந்த இடைத்தேர்தலில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி 84,709 வாக்குகளையும், அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பிரியங்கா திப்ரேவால் 26,320 வாக்குகளையும் பெற்றனர். பாஜக வேட்பாளரை விட 58,832 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
இதனையடுத்து, இன்று (அக்டோபர் 7 -ம் தேதி) மேற்கு வங்க சட்டசபையில் மேற்குவங்க ஆளுநர் ஜக்தீப் தங்கர் மம்தான பார்ஜிக்கு பதிவி பிரமாணம் செய்து வைத்தார். அத்துடன், ஷம்ஷெர்கஞ்ச் மற்றும் ஜாங்கிபூர் ஆகிய தொகுதிகளில் வெற்றிபெற்ற அமிருல் இஸ்லாம் மற்றும் ஜாகிர் ஹொசைன் ஆகியோருக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.