சென்னை: தமிழக விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு பரிசுத்தொகையாக ரூ.3.98 கோடி ஊக்கத் தொகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதில் பாராலிம்பிக் போட்டியில் பதக்கம் பெற்ற மாறியப்பன் உள்பட பதக்கங்கள் வென்ற விளையாட்டுத் துறையினர் 18 பேருக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழகத்தை சேர்ந்த தடகள வீரர்கள் உள்ளிட்ட 18 பேருக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஊக்கத்தொகை வழங்கினார்.
பாராலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலு, செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் உள்பாட பலருக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
ஏற்கனவே, ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்கு முன்பகாவே விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.5 லட்சம் வழங்கிய நிலையில், தற்போது மேலும் வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக ஊக்கத்தொகையை முதலமைச்சர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் விளையாட்டு துறை அமைச்சர் மெய்யப்பன் மற்றும் விளையாட்டு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
சென்னைத் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விளையாட்டு வீரர்வீராங்கனைகள், பயிற்சியாளர்கள் என 18 பேருக்கு ஊக்கத் தொகைக்கான காசோலைகளை வழங்கிப் பாராட்டினார்.
தமிழக அரசு ஊக்கமளித்து வருவதால் அடுத்த மூன்றாண்டுகளில் தமிழகத்தில் சதுரங்க வீரர்கள் அதிகம்பேர் உருவாக வாய்ப்புள்ளதாக பிரபல செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் கூறினார். அதுபோல பாராலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றதற்கு 2 கோடி ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சரிடம் பெற்றது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக சேலம் மாரியப்பன் தெரிவித்தார்.