வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன் காக்க “புலம்பெயர் தமிழர் நல வாரியம்” அமைக்கப்படும் என  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதற்கு உலகம் முழுவதும் உள்ள தமிழர்களிடையே இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
நெட்டிசன்
-ஓவியர் இரா.பாரி – Artist:
வாழ்வாதாரத்தைத் தேடி வெளிநாடுகளுக்குச் செல்லும் நமது தமிழ்ச் சொந் தங்களுக்கு, சில நேரங்களில் இக் கட்டுகள் ஏற்படுகின்றன! அங்கே வேலையில் பாதுகாப்பு இன்மை… ஊதியத்தில் பிரச்சனைகள், வேலைக்கு அனுப்பும் நிறுவனங்களால் ஏமாற்றப்படுதல்… போன்ற பல துயரங்களை நமது சகோதரர்கள் அனுபவிக்கிறார்கள்!
இந்தத் துயரங்களை ப் போக்குவதற்கு,, கடந்த கலைஞர் ஆட்சியில் 2010 ஆம் ஆண்டு இறுதியில் இந்த நல வாரியம் அமைக்கப் பட்டது! ஆனால், அதற்குப் பின் வந்த அ. தி. மு. க. ஆட்சியில் இந்த வாரியம் கிடப்பில் போடப் பட்டது!
ஆனால், தற்போது முதல் அமைச்சர் மு. க. ஸ்டாலின், தற்போது இந்த “புலம் பெயர்ந்த தொழிலாளர் நல வாரியத்தை ” நடைமுறைப்படுத்தி இருக்கிறார்!
இதனால், இத்தனை நாட்கள் துயரங்களில் மூழ்கிக் கிடந்த தொழிலாளர்கள் இப்போது நிம்மதி யுடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களையும், அவருக்கு உறுதுணையாக இருக்கும் அமைச்சர் செஞ்சி கே. எஸ். மஸ்தானையும் வாழ்த்துகிறார்கள்!