சென்னை: தமிழகத்தில் நேற்று மேலும் 1,432  கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், சென்னையில் மட்டும் 176 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரிய வந்துள்ளது. மாநிலத்திலேயே அதிக பாதிப்பு சென்னையில் பதிவாகி உள்ளது.

மாநிலம் முழுவதும்  கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக மேலும்  1,432 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதுடன்,  பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 26,72,843 பேர் ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35,707 ஆக அதிகரித்துள்ளதுடன்,  இதுவரையில் 26,20,499 பேர் சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் தற்போது கொரோனா வார்டில் 16,637 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் நேற்று மேலும் 176 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 5,50,936 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று 4 பேர் உயிர் இழந்துள்ள நிலையில், சென்னையில் மட்டும் இதுவரை 8,502 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று மேலும்  187 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில்,  மொத்தம் 5,40,549 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது சென்னையில் 1,885 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மண்டலம் வாரியாக கொரோனா பாதிப்பு – விவரம்: