கொல்கத்தா

காங்கிரஸால் பாஜகவை வீழ்த்த முடியாது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்றி பெறும் எனப் பலரும் ஊகித்த நிலையில் ஆளும் திருணாமுல் கட்சி அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்து மம்தா பானர்ஜி மீண்டும் முதல்வர் ஆனார்.  ஆனால் மம்தா அந்த தேர்தலில் தோல்வி அடைந்ததால் சமீபத்தில் நடந்த இடைத் தேர்தலில் பவானிப்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதல்வர் பதவியைத் தக்க வைத்துக் கொண்டார்.

மம்தா பானர்ஜி தங்கள் கட்சிப் பத்திரிகையில் “டில்லியின் அழைப்பு” என்னும் தலைப்பில் ஒரு கட்டுரை எழுதி உள்ளார்.   அந்த கட்டுரையில் அவர், “2 மக்களவை தேர்தலில் காங்கிரஸால் பாரதிய ஜனதாவை வீழ்த்த முடியாததால் அப்பொறுப்பை இந்திய மக்கள் தற்போது எங்கள் தோளில் சுமத்தியுள்ளனர். திருணாமுல் மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் பெற்ற அமோக வெற்றியால் அதன் மீது பிற மாநில மக்களுக்கும் நம்பிக்கை பிறந்துள்ளது

புது இந்தியாவை திரிணமூல் காங்கிரஸால் மட்டும் உருவாக்க முடியும் என இந்திய மக்கள் கனவு காண்கின்றனர். எங்கள் கட்சி  மக்களின் விருப்பத்திற்கேற்ப பாரதிய ஜனதாவுக்கு எதிரான சக்திகளை ஓரணியில் திரட்ட முனைந்துள்ளது.  எங்களுக்கு எதிரணிக்கு தலைமை தாங்க விருப்பம் இல்லை . ஆனால் காங்கிரஸ் கட்சி தற்போதைய யதார்த்த சூழலைப் புரிந்துகொள்ள வேண்டும்  எதிரணியை இதன் மூலம் வலிமையானதாக மாற்ற முடியும்” எனத் தெரிவித்துள்ளார்.