
கொரோனாவால் சினிமா துறை முடங்கி உள்ளதால், ஓ.டி.டி. தளங்களில் வெளியாகும் வெப் தொடர்களுக்கு மவுசு கூடி உள்ளது.
அந்த வகையில், தற்போது நடிகர் ஆர்யா, வெப் தொடரில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் அறிமுகமாகும் வெப் தொடரை, இயக்குனர் மிலிந்த் ராவ் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவர் சித்தார்த்தின் ‘அவள்’, நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘நெற்றிக்கண்’ ஆகிய படங்களை இயக்கியவர்.
இந்த வெப் தொடரில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடிகை வாணி போஜனும், முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் பசுபதியும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Patrikai.com official YouTube Channel