பாட்னா: உ.பி.யில் நடந்த வன்முறையில் பலியான விவசாயிகள் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறச்சென்ற காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வதோரா கைது செய்யப்பட்டுள்ளார்.
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக உத்திரப்பிரதேசத்தில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் லகிம்பூர் கேரி மாவட்ட விவசாயிகள் தீவிரமாக போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இந்த மாவட்டத்தில் நடக்கவிருந்த நிகழ்ச்சி ஒன்றில் உ.பி. துணை முதலமைச்சர் கேசவ பிரசாத் மவுரியா பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியானது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஆயிரக்கணக்கான விவசாயிகள் திரண்டனர். வேளாண் சட்டங்கள் தொடர்பாக கருப்பு கொடி காட்ட விவசாயிகள் திரண்டிருந்தனர்.
இந்த நேரத்தில்,அந்த பகுதியில் காரில் வந்த மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா கார் உள்பட பாஜகவினரின் வாகனங்கள் மீது கல்வீச்சு நடைபெற்றது. இதனால் கார்கள் நிலைதடுமாறி விவசாயிகள் மீது மோதியதில் 2 விவசாயிகள் இறந்தனர். இதனால், இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள், பாஜகவினரின் வாகனத்துக்கு தீ வைத்ததாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 4 விவசாயிகள் மொத்தம் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாககாவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் லகிம்பூர் கேரி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
இந்த நிலையில், கார்விபத்து மற்றும் வன்முறையில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரை சந்திக்க, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா தனது ஆதரவாளர்களுடன் லக்கிம்பூர் நோக்கி வந்தார். ஆனால் போலீசார் அவரை மாவட்டத்திற்குள் அனுமதிக்கவில்லை. 144 போடப்பட்டுள்ளதால், யாரும் உள்ளே வரக்கூடாது என தடுத்தனர். அவரர்களுடன் பிரியங்கா போலீசாருடன் கடும் வாக்குவாத்ததில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதை தொடர்ந்து ஹர்கோனில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வதோரா கைது செய்யப்பட்டார். இதை உத்தர பிரதேச மாநிலம் இளைஞர் காங்கிரஸ் தேசிய தலைவர் பி.வி.சீனிவாஸ் தனது ட்விட்டரில் உறுதிப்படுத்தியுள்ளார்.