டில்லி

ந்தியாவில் நேற்று 21,634 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,38,34,243 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21,634 அதிகரித்து மொத்தம் 3,38,34,243 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 182 அதிகரித்து மொத்தம் 4,49,029 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 26,702 பேர் குணமாகி  இதுவரை 3,31,13,644 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 2,58,507 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 2,692 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 65,59,349 ஆகி உள்ளது  நேற்று 40 பேர் உயிர் இழந்து மொத்தம் 1,39,206 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 2,716 பேர் குணமடைந்து மொத்தம் 63,80,670 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 35,889 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 12,297 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 47,20,206 ஆகி உள்ளது.  இதில் நேற்று 74 பேர் உயிர் இழந்து மொத்தம் 25,377 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 16,333 பேர் குணமடைந்து மொத்தம் 45,57,199 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,37,101 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 664 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 29,77,889 ஆகி உள்ளது  இதில் நேற்று 8 பேர் உயிர் இழந்து மொத்தம் 37,819 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 711 பேர் குணமடைந்து மொத்தம் 29,27,740 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 12,301 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 1,531 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 26,68,495 ஆகி உள்ளது  இதில் நேற்று 23 பேர் உயிர் இழந்து மொத்தம் 35,650 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,582 பேர் குணமடைந்து மொத்தம் 26,15,873 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 16,972 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர பிரதேச மாநிலத்தில் நேற்று 768 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 20,52,763 ஆகி உள்ளது.  நேற்று 9 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 14,204 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 973 பேர் குணமடைந்து மொத்தம் 20,28,202 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 10,357 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தற்போதைய நிலவரப்படி தாத்ரா – நாகர்ஹவேலி – டாமன் – டையூ பகுதி மற்றும் லட்சத்தீவுகளில் பாதிப்படைந்தோர் ஒருவர் கூட இல்லை.