1972-ல் ஏவிஎம் தயாரித்த காமெடி திரைப்படம் காசேதான் கடவுளடா. முத்துராமன் நடித்த இதன் ரீமேக்கை ஆர்.கண்ணன் இயக்குவதாக கூறப்படுகிறது.

இதை இந்தக் காலத்துக்கு ஏற்றபடி ஆர்.கண்ணன் ரீமேக் செய்வதாக கூறப்படுகிறது. முத்துராமன் வேடத்தில் மிர்ச்சி சிவாவும், தேங்காய் சீனிவாசன் வேடத்தில் யோகி பாபுவும் நடிக்கயிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

காசேதான் கடவுளடா படத்தை சித்ராலயா கோபு இயக்கியிருந்தார். இவர் முதலில் இதை நாடகமாகத்தான் எழுதினார். முத்துராமன், மனோரமா என பலரும் அதில் நடித்திருந்தனர். நாடகம் வெற்றிகரமாக ஓடவே ஏவிஎம் அதனை படமாக்கியது. சித்ராலயா கோபுவே படத்தை இயக்கினார்.

சிவா & யோகிபாபு முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, ஊர்வசி , ப்ரியா ஆனந்த் ,கருணாகரன், தலைவாசல் விஜய், மனோ பாலா ஆகியோருடன் இணைந்து விஜய் டிவியின் குக் வித் கோமாளி புகழ் & சிவாங்கி முக்கிய கதாபாத்திரஙகளில் நடித்துள்ளனர்.

காசேதான் கடவுளடா ரீமேக் திரைப்படத்தை தயாரிப்பாளர் M.K.ராம் பிரசாத் அவர்களின் MKRP புரொடக்சன்ஸ் மற்றும் இயக்குனர் R.கண்ணனின் மசாலா பிக்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. ஒளிப்பதிவாளர் பிரசன்ன.S.குமார் ஒளிப்பதிவில், லியோ ஜான் பால் படத்தொகுப்பு செய்ய N.கண்ணன் இசையமைக்கிறார்.

இந்நிலையில் காசேதான் கடவுளடா ரீமேக் படத்தின் கலக்கலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.