சென்னை: பிரபல இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனின் நான்காவது மகனான ஹரிதாஸ் விசுவநாதன் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.

தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக மட்டுமல்லாமல், பாடகராகவும் நடிகராகவும் தனது பன்முக திறமைகளை வெளிக்காட்டியவர் எம்.எஸ்.விஸ்வநாதன்.  இவர் வயது முதிர்வு காரணமாக, 2015ஆம் ஆண்டு ஜூலை மாதம் தனது 87 வயதில் காலமானார்.

இந்த நிலையில், அவரது இளையமகன் ஹரிதாஸ் விஸ்வநாதன் இன்று காலாமானார். 55 வயதான ஹரிதாஸ் சுமார் 20 ஆண்டுகள் வெளிநாட்டில் வசித்து வந்தார். சமீப ஆண்டுகளாக  சென்னையில் வசித்து வந்தார். இவருக்கு மனைவி மற்றும் மகள் உள்ளனர். ஹரிதாஸ் விஸ்வநாதன் 20 ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார்.

சமீபத்தில், அவர் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹரிதாஸின் மறைவுக்கு திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.