
நடிகர் சிலம்பரசன் தனது ரசிகர்களுக்கு அறிக்கை வெளியிட்டுள்ளார் . அதில் “நீண்ட நாள்களாக இயற்கையின் செயல்களால் உங்களிடம் நேரடியாக உறவாடாமல். தொலைபேசி வழியாக உறவு கொண்டோம்.
மேலும் இளைஞர் அணி, வழக்கறிஞர்கள் அணி, மருத்துவ அணி, தொழில்நுட்ப அணி, கலை இலக்கிய அணிகள் மூலம் மன்றத்தை விரிவுபடுத்த உள்ளோம்.
நம் மன்றத்தின் அகில இந்திய தலைவர் டி.வாசு தலைமையில் சென்னையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. மாநில, மாவட்ட, வட்ட பொறுப்பாளர்கள் தலைமை அலுவலகத்தை தொடர்பு கொண்டு கலந்து கொள்ள பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
Patrikai.com official YouTube Channel