தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின்போது, காவல்துறைக்கு தலைமை வகிக்கும் முதல்வர் ஸ்டாலின் காவல்துறை தொடர்பான ஏராளமான அறிவிப்புகளைவெளியிட்டார். அப்போது, புதிய மாநகராட்சிகளாக அறிவிக்கப்பட்டுள்ள தாம்பரம் மற்றும் ஆவடியில் புதிய காவல் ஆணையர்கள் நியமிக்கப்படுவர்கள், என்றும், ஆவடி, தாம்பரத்தை தலைமையிடமாகக் கொண்டு தனித்தனி காவல் ஆணையரகங்கள் அமைக்கப்படும் என அறிவித்திருந்தார்.
இதையடுத்து, தாம்பரம், ஆவடிக்கு புதிய காவல் ஆணையர்களை நியமித்து தமிழகஅரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. அதன்படி
தாம்பரம் காவல் ஆணையகரத்துக்கு தலைவராக ஏடிஜிபி ரவி ஐபிஎஸ் நியமிக்கப்பட்டு உள்ளர்.
ஆவடி காவல் ஆணையகரத்துக்கு தலைவராக ஏடிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் நியமிக்கப்பட்டு உள்ளார்.