லக்னோ

கிரிக்கெட் வீரர் விராட் கோலி தனது மனையை விவகாரத்து செய்ய வேண்டும் என்று உத்தரப் பிரதேச மாநில பாஜக சட்டமன்ற உறுப்பினர் நந்த் கிஷோர் குர்ஜார் கூறியுள்ளார்.

நாட்டில் தொடரும் கொரோனா அச்சுறுத்தல், ஊரடங்கு போன்ற காரணங்களால் திரையரங்குகள் பல நாட்களுக்கு மேலாக மூடப்பட்டு இருந்தது.   ஒரு சில முன்னணி நடிகர், நடிகைகளின் படங்கள் தற்போது ஆன்லைன் தளங்களில் வெளியிடப்படுகின்றன. பல மாநிலங்களில் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் முன்னணி நடிகர்களின் பார்வை ஆன்லைன் தளங்கள் பக்கம் திரும்பியுள்ளது.

இவற்றில் திரைப்படங்களாக இல்லாமல், வெப் சீரியஸ் கலாச்சாரமும் வேரூன்றி வருகிறது. அண்மையில் இந்தி முன்னணி நடிகை அனுஷ்கா சர்மா தயாரித்துள்ள ”பாட்டலஸ் லோக்” என்னும் வெப்  சீரிஸ் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.  இந்த வெப் சீரிஸில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருக்கும் பாஜக தலைவர்களைக் கொச்சைப்படுத்தும் விதமாகக் காட்சிகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

உ பி மாநில பாஜக சட்டமன்ற உறுப்பினர் நந்த் கிஷோர் குர்ஜார் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனுஷ்கா ஷர்மா மீது காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார்.  அவர் தனது புகாரில், தன்னையும் பாஜக தலைவரையும் “பாட்டலஸ் லோக்” வெப் சீரிஸில் தவறாக சித்தரித்து இருக்கிறார்கள் என தயாரிப்பாளரான அனுஷ்கா ஷர்மா மீது புகார்  தெரிவித்துள்ளார்.

இந்த புகார் ஏற்றுக்கொள்ளப்பட்டு அனுஷ்கா ஷர்மா மீது எஃப் ஐ ஆர் பதியப்பட்டுள்ளது.

மேலும் நந்த் கிஷோர் குர்ஜார் “இந்த வெப் சீரிஸில் தேசியப் பாதுகாப்பு சட்டம் குறித்து தவறாகச் சித்தரிக்கப்பட்டுள்ளதால் இதுபோன்ற வெப் சீரிஸ்கள் தடை செய்யப்பட வேண்டும். கிரிக்கெட் வீரர் விராட் கோலி தேசப்பற்று மிக்கவர் என்பதால் அவர் அனுஷ்கா ஷர்மாவை உடனடியாக விவாகரத்து செய்ய வேண்டும்” எனக் கூறியுள்ளார்.