ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை ஏ.எல்.விஜய் தலைவி என்ற பெயரில் இயக்கியுள்ளார். ஜெயலலிதாவாக கங்கனா ரனவத்தும், எம்ஜிஆராக அரவிந்த்சாமியும் நடித்துள்ளனர்.
இதில் அரவிந்த் சாமியுடன் சமுத்திரக்கனியும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். எம்.ஜி.ஆருக்கு மிக நெருங்கிய நண்பரான ஆர்.எம்.வீரப்பன் கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி நடிக்கிறார்.
தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்தை . விஷ்ணு வர்தன் இந்துரி மற்றும் சாய்லேஷ் ஆர் சிங் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். கே.வி.விஜயேந்திர பிரசாத் கதை எழுதியுள்ளார். தலைவி படத்திற்கு U சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் திரையரங்கில் தலைவி திரைப்படம் வெளியானது. ஜெயலலிதாவாக நடித்திருந்த கங்கனா ரனாவத்தின் நடிப்பை பலரும் பாராட்டி இருந்தனர். ஜெயலலிதா முதல்வராக பதவியேற்பதோடு திரைப்படம் முடிந்தது. திரைப்படத்தின் சட்டப்பேரவை தாக்குதல் காட்சி உள்ளிட்டவை தவறாக சித்தரிக்கப்பட்டதாகவும் விமர்சனம் எழுந்தது.
இந்நிலையில், தலைவி திரைப்படத்தின் 2ம் பாகம் தயாராக வாய்ப்பு உள்ளதாக படத்தில் பணியாற்றிய எழுத்தாளர் ரஜத் அரோரா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பாலிவுட் லைவ் ஊடகத்துக்கு பேட்டியளித்துள்ள அவர், ‘சினிமாவில் இருந்து அவர் முதல்வராகுவதும் வரை மட்டுமே முதல் பாகத்தில் சொல்ல விரும்பினோம்.
அவரது அரசியல் குறித்து காட்ட வேண்டும் என்றால் அதனை இரண்டாம் பாகத்தில் காட்டலாம் என்ற எண்ணம் உள்ளது . கதை வடிவம் பெறுகிறதா என்று பார்ப்போம். இது தொடர்பாக கங்கனா ரனாவத் உடன் பேசினோம்’ என்று கூறியுள்ளார்.