கொல்கத்தா
மேற்கு வங்க மாநில பாஜக தலைமை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பாஜகவில் ஒவ்வொரு மாநிலத்திலும் தலைமையில் பல மாறுதல்கள் செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில் ஆட்சியைப் பிடிக்க பாஜக தேசிய தலைமை பலவித முயற்சிகளை எடுத்து வருகிறது. இதையொட்டி மாநிலத் தலைமை பொறுப்பில் ஆட்களை மாற்றும் நடவடிக்கை நடந்து வருகிறது.
மேற்கு வங்க மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை அமைக்கும் என அக்கட்சியினர் மிகவும் நம்பி வந்தனர். ஆளும் திருணாமுல் கட்சியில் இருந்து பலர் பாஜகவுக்கு மாறினர். இந்த ஊகங்கள் பொய்யாகும்படி திருணாமுல் அறுதி பெரும்பான்மை பெற்று மீண்டும் ஆட்சியை அமைத்துள்ளது.
இந்நிலையில் மேற்கு வங்க மாநில பாஜக தலைவராக இருந்த திலிப் கோஷுக்கு பதில் சுகந்தா மஜூம்தார் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். திலிப் கோஷ் தற்போது தேசிய துணைத் தலைவராக உடனடியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த மாற்றம் மேற்கு வங்க பாஜகவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.