காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண்கள் வேலைக்கு செல்ல தாலிபான்கள் தடை செய்துள்ள நிலையில், பெண்கள் மட்டுமே செய்ய வேண்டிய சில பணிக்கு மட்டும் அவர்களை அனுமதித்து உள்ளனர்.
ஆப்கனில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறத்தொடங்கியதும் தாலிபான்கள் மீண்டும் தலையெடுத்தனர். ஒவ்வொரு நரகங்களாக தங்களது கட்டுப்பாட்டுக்குள் வந்த நிலையில், தலைநகர் காபூலையும் கைப்பற்றினர். இதனால், அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு தப்பியோடினார்.
இதையடுத்து, ஆப்கானிஸ்தானில் ஆட்சி அமைக்கப்போவதாக அறிவித்த தாலிபான்கள் அதற்கான முயற்சிகளில் இறங்கினர். அதைத்தொடர்ந்து சுமார் 1 மாதங்களுக்கு பிறகு, செப்டம்பர் 7ந்தேதி இடைக்கால அரசு நிறுவப்பட்டது,
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தாலிபான்கள், பெண்கள் வேலை பார்க்க அனுமதி, கல்வி உரிமை உள்ளிட்ட பிற உரிமைகள் வழங்கப்படும் என்றும் கூறியதுடன், கடந்த 1995ம் ஆண்டு ஆட்சியின்போது இருந்த நிலை இருக்காது. பெண்களுக்கு உரிய உரிமைகள் வழங்கப்படும். பணிக்குச் செல்லவும், கல்வி கற்கவும் பெண்கள் அனுமதிக்கப்படுவார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், அவர்களின் அறிவிப்புக்கு நேர்மாறாகவே அவர்களின் நடவடிக்கைகள் உள்ளன. க சமீபத்தில் மகளிர் நலத்துறை அமைச்சகம் கலைக்கப்பட்டது. பின்னர், முதல்கட்டமாக பெண் பத்திரிகையாளர்களை பணிக்குச் செல்லவிடாமல் தலிபான்கள் தடை விதித்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பெண் குழந்தைகள் பள்ளிகளுக்கு செல்லவும் தடை விதித்தனர். இதுவும் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனால் தாலிபான்களுக்கு எதிராக பொதுமக்கள் வீதிகளில் இறங்கி, கோஷங்களை எழுப்பியபடி போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் மாநகராட்சி பெண் ஊழியர்கள் பணிக்கு வர தலீபான்கள் தடை விதித்து உள்ளனர். தலைநகர் காபூலில் உள்ள மாநகராட்சி அலுவலகதில் பணியாற்றும் பெண்கள் பணிக்கு சென்றபோது, அவரை தடுத்து நிறுத்திய தாலிபான்கள், அவர்களை விசாரித்து. வீட்டிலேயே இருக்குமாறு திருப்பி அனுப்பினர். இருப்பினும், மாநகராட்சியில் பெண்களால் மட்டுமே செய்ய முடியும் பணிக்கு செல்ல சில பெண்களுக்கு அ னுமதி அளித்து உள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.