சென்னை:
ள்ளாட்சித் தேர்தலில் மநீமவுக்கு டார்ச் லைட் சின்னம் வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வருகின்ற அக்டோபர் மாதம் 6 மற்றும் 9ம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெறவுள்ள 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி தனித்துப் போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
உள்ளாட்சித் தேர்தலுக்காக கமல்ஹாசனே நேரடியாகக் கிராமப்புறங்களுக்குச் சென்று பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யத்திற்கு டார்ச் இலகு சின்னம் வழங்கப்பட்டிருப்பதாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், உள்ளாட்சி அமைப்புகளை வலுவாக்கி மக்கள் பங்கேற்பை உறுதி செய்ய முனைப்புடன் செயல்படும் மக்கள் நீதி மய்யத்திற்கு ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்காக ‘டார்ச்லைட்’ சின்னம் வழங்கப்பட்டுள்ளதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.