பாட்னா: வங்கி கணக்கில் தவறுதலாக வந்த ரூ.5லட்சம் வந்ததால், இன்ப அதிர்ச்சி அடைந்த கிராமவாசி, அந்த பணம் மோடி அனுப்பியதாக எண்ணி தாராளமான செலவழித்துள்ளார் ஆனால், பணம் தவறுதலாக வரவு வைக்கப்பட்டதாக கூறி, அவரிடம் வங்கி அதிகாரிகள் பணத்தை திரும்பி கேட்க, அவர் தர முடியாது என்று கூறியதால், வங்கி அதிகாரிகள் செய்வதறியாது திகைத்து உள்ளனர்.
‘மோடி , பாரத பிரதமராக பதவி ஏற்பதற்கு முன்பு சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பஸ்தார் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில், கடந்த 2013ம் ஆண்டு நவம்பர் 7ம் தேதி பேசும்போது, ஒவ்வொரு இந்தியனின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவதாக பேசியதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், அவர், ‘’வெளிநாட்டு வங்கிகளில் உள்ள கருப்புப் பணத்தை மீட்டு இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுப்போம். என்றும், இந்த பணம் கிடைத்தால், ஒவ்வொரு இந்தியரின் வங்கிக் கணக்கில் ரூ.15 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை பணம் செலுத்தும் அளவுக்கு வெளிநாட்டு வங்கிகளில் இந்திய அரசியல்வாதிகளின் கருப்புப் பணம் பதுக்கப்பட்டு உள்ளது என்று கூறியிருந்தாக விளக்கம் அளிக்கப்பட்டது.
ஆனால், மோடி வெற்றி பெற்றால் ரூ.15 லட்சம் பணத்தை இந்தியர்களின் வங்கிக் கணக்கில் செலுத்துவேன் என்று கூறியதாக பரப்பப்பட்டன. இது இன்றுவரை விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளது.
இநத் நிலையில், பீகார் மாநிலத்தில், மற்வொருவரின் வங்கி கணக்கு செலுத்தப்பட்ட ரூ.5 லட்சம், தவறுதலாக பாட்னா கிராம வங்கியில் கணக்கு வைத்திருந்த ரஞ்சித்தாஸ் என்பவரது வங்கிக் கணக்குக்கு சென்று விட்டது. இதை கண்டு இன்ப அதிர்ச்சி அடைந்த கிராமவாசி, மோடிதான் தனது கணக்கில் ரூ.5 லட்சம் போட்டுள்ளதாக எண்ணி, அதை எடுத்து சுகபோகமாக செலவழித்துள்ளார்.
இதற்கிடையில் வங்கி அதிகாரிகள் ரஞ்சித்தாஸ்-க்கு ரூ.5 லட்சத்தை திரும்ப செலுத்த வேண்டும் என நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ரஞ்சித்தாஸ், பணத்தை செலவழித்து விட்டதாகவும், பிரதமர் தனக்கு முதல் தவணையாக ரூ.5 லட்சம் போட்டதாக எண்ணி செலவழித்து விட்டேன். தன்னிடம் பணம் இல்லை, அதனால் திருப்பி செலுத்த இயலாது என்று கைவிரித்து விட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக வங்கி அதிகாரிகள் அவர்மீது காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். அந்த நபரை போலிஸார் தற்போது கைது செய்துள்ளனர். பணத்தை திருப்பி வழங்க வங்கி கணக்கில் எதுவும் பாக்கி இல்லை என்று அவர் கூறியுள்ளார். இதனால் வங்கி அதிகாரிகள் கையிலிருந்து பணத்தைச் செலுத்தவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.