சென்னை

ன்று ஊரக உள்ளாட்சித் தேர்தல்களுக்கான வேட்பு மனுத் தாக்கல் தொடங்குகிறது.

மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்புக்குப் பிறகு தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது.  நேற்று முன்தினம் மாவட்ட பிரிவின் போது விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு அக்டோபர் 6 மற்றும் 9 ஆம் தேதிகளில் தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு வெளியானது.  இதில் முதல் கட்டமாக உத்திரமேரூர், வாலாஜாபாத் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் இரண்டாம் கட்டமாகக் குன்றத்தூர், ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளிலும் தேர்தல் நடைபெற உள்ளது.

இதில் குன்றத்தூர், ஸ்ரீபெரும்புதூர் பகுதிகள் சென்னை அருகில் அமைந்துள்ளன.  அந்த பகுதிகளில் பல்வே|று கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் உள்ளதால் இவை முக்கியமான பகுதிகளாக கருதப்படுகிறது.   இதற்குள் ஐயப்பன் தாங்கல் , கொளப்பாக்கம், கெருகம்பாக்கம், கோவூர் பகுதிகள் அடங்கும்.   இன்று ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் தொடங்க உள்ளது.

உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் கட்சிகளை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கேற்கும் என்பதால் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களைத் தேர்வு செய்வதில் மும்முரம் காட்டி உள்ளன . ஒவ்வொரு கட்சியிலும்  கிளைச் செயலர், ஒன்றிய செயலர், போன்ற அடிப்படை பொறுப்பில் உள்ளவர்களே கட்சிகளின் ஆணிவேராக கருதப்படுகின்றனர். எனவே அவர்கள் மூலம் மக்களின் வாக்குகளைக் கவரக் கட்சிகள் திட்டமிட்டுள்ளன.