சென்னை: மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான 5,570 போராட்ட வழக்குளை ரத்து செய்து, தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.
தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரின்போது, மத்திய மாநில அரசுகளுக்கு எதிரான போராடியவர்கள்மீது கடந்த ஆட்சி காலத்தில் போடப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார். மத்திய அரசின், சிஏஏ சட்டம், வேளாண் சட்டத்திருத்த மசோதா மற்றும் சட்டத்திருத்த சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகள், விவசாய அமைப்புகள் மீது போடப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்படும் என மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார்.
இதையடுத்து 5,570 போராட்ட வழக்குளை ரத்து செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், குடியுரிமை திருத்தச் சட்டம், வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் , 8 வழிச்சாலை, கூடங்குளம் அணு உலை, நியூட்ரினோ திட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள். பத்திரிகையாளர்கள் மீது பதிவு செய்யப்பட்ட அவதூறு வழக்குகள் உள்பட மொத்தம் 5,570 வழக்குகளையும் ரத்து செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.