சென்னை: அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ள திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின், முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் சென்று ஆளுநருக்கு நன்றி தெரிவித்தார். அத்துடன் ஆளுநர் பன்வாரிலால் தமிழ்நாட்டில் இருந்து விடைபெற உள்ள நிலையில், அவரை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசியதாகவும் கூறப்படுகிறது.
சென்னை சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏவான உதயநிதி ஸ்டாலின் அண்ணா பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் ( ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்) உறுப்பினராக நியமிக்கப்பட்டு உள்ளார்.. அலுவல் சாரா உறுப்பினராக மூன்றாண்டுகளுக்கு உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்படுவதாக சட்டப்பேரவையில் நேற்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
இதையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் முத்த அமைச்சர்கள் கவர்னர் பன்வாரிலாலை சந்தித்து நன்றி தெரிவித்தனர் உதயநிதி ஸ்டாலின் கவனருக்கு சால்வை அணிவித்து நன்றி கூறினார்.
மேலும், தமிழ்நாட்டுக்கு புதிய ஆளுநர் நியமிக்கப்பட்டுள்ளதால், தமிழ்நாட்டில் இருந்து விடைபெறவுள்ள பன்வாரிலாலுக்கு மரியாதை நிமித்தமாக வாழ்த்தும் தெரிவித்தனர்.