சென்னை

மிழகத்தில் தற்போது வரை 28.36 லட்சம் பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசிகள் போடும் பணி நாடெங்கும் தீவிரமாக நடந்து வருகிறது.  நாடெங்கும் இந்த வருட இறுதிக்குள் தகுதி உடைய அனைவருக்கும் தடுப்பூசிகள் போட்டு முடிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.  அவ்வகையில் இன்று தமிழகம் எங்கும் மெகா தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று காலை 7 மணி முதல் தொடங்கி இதுவரை ஒரே நாளில் 28,36,776 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.  இது தமிழக தடுப்பூசி வரலாற்றில் புதிய சாதனை ஆகும்.  இதில் முதல் டோஸ் தடுப்பூசி 21,07,309  பேருக்கும் இரண்டாம் டோஸ் தடுப்பூசி 7,29,467 பேருக்கும் போடப்பட்டுள்ளது.

இதில் சென்னையில் மட்டும் 1,85,370 பேருக்குப் போடப்பட்டு முதலிடத்தில் உள்ளது.  இதில் 1,14,760 பேர் முதல் டோஸ் மற்றும் 70,610 பேர் இரண்டாம் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.

இன்று ஒரே நாளில் 18 – 44 வயது உடையோர் 16,00,195 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்   அதைப் போல் 45-60 வயதானோர் 8,89,741 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.  மேலும் 60 வயதுக்கும் அதிகமான 3,47,164 பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இன்றைய நிலைப்படி தமிழகத்துக்கு மேலும் அதிக தடுப்பூசிகளை மத்திய அரசிடம் இருந்து  ஒதுக்கீடு செய்ய மாநில அரசு கோரிக்கை விடுக்க உள்ளது.