அகமதாபாத்:
குஜராத் முதல்வர் விஜய் ரூபானி தலைமையிலான  மாநில அரசு கொரோனா காலத்தில் சரியாகச் செயல்படாததாலும், பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் தவறியதாலும்  நீக்கப்பட்டதாகக் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
குஜராத் முதல்வர் விஜய் ரூபானி இன்று திடீரென தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அவர் எதற்காக ராஜினாமா செய்தார் என்பது குறித்து தகவல்கள் வெளியிடப்படவில்லை. அதேபோல பாஜக சார்பிலும் விஜய் ரூபானி ராஜினாமா குறித்து எந்தவொரு விளக்கமும் வெளியிடப்படவில்லை.
இந்நிலையில், இதுகுறித்து பேசிய குஜராத் பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும்,  முன்னாள் மத்திய அமைச்சருமான  பாரத் சோலங்கி தெரிவிக்கையில்,  குஜராத் முதல்வர் விஜய் ரூபானி தலைமையிலான  மாநில அரசு கொரோனா காலத்தில் சரியாகச் செயல்படாததாலும், பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் தவறியதாலும்  நீக்கப்பட்டார் என்று குற்றம் சாட்டியுள்ளார்.