சென்னை: கடந்த அதிமுக ஆட்சியில் சட்டப்பேரவை 110 விதியின் கீழ் அடுக்கடுக்காக ஏராளமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. அப்படி அறிவிக்கப்பட்ட திட்டங்கள் நிலை என்ன நிலையில் உள்ளது என்பது குறித்த அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று பேரவையில் வெளியிடவுள்ளார்.
தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்டு மாதம் 13ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. அன்றைய தினம் பொதுநிலை பட்ஜெட்டும், 14ந்தேதி வேளாண் பட்ஜெட்டும், காகிதமில்லா முறையில் இ-பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து, பட்ஜெட் தொடர்பான விவாதங்கள் நடைபெற்றது. தொடர்ந்து, மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் ஆகஸ்டு 20ந்தேதி முதல் நடைபெற்று வருகின்றன. வருகிற 13-ஆம் தேதியுடன் கூட்டத்தொடர் முடிவடை உள்ளது. இதையடுத்து நேற்று பேரவை காலை, மாலை என இருமுறை சட்டப்பேரவை கூடியது.
இன்று காவல்துறை உள்ளிட்ட துறைகளின் மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற உள்ளது. இன்றைய அமர்வில், அதிமுக ஆட்சியில் அப்போதைய முதல்வர்கள் மறைந்த ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ் போன்றவர்களால் சட்டப்பேரவை விதி 110ன் கீழ் ஏராளமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. ஆனால், அந்த திட்டங்களில் பல நிறைவேற்றப்படாமலேயே கிடப்பில் போடப்பட்டது. அதுகுறித்த விவரங்களை, தற்போதைய நிதிஅமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று சட்டப்பேரவையில்வெளியிடுகிறார்.
தொடர்ந்து, 3 நாட்கள் விடுமுறைக்குப் பின்பு 13-ஆம் தேதியும் விவாதம் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது 13ந்தேதி கேள்வி நேரம் கிடையாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அன்றையன காவல்துறை மானிய கோரிக்கை விவாதத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்து பேசுவார் என்றும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.