மும்பை
இன்று மகாராஷ்டிராவில் 4,174 மற்றும் கேரளா மாநிலத்தில் 30,196 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் இன்று 4,174 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. இதுவரை 64,97,872 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இன்று 65 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதுவரை 1,37,962 பேர் உயிர் இழந்துள்ளனர்.
இன்று 4,155 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 63,08,491 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 47,880 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது.
கேரளா மாநிலத்தில் இன்று 30,196 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. இதுவரை 42,83,494 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இன்று 181 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதுவரை 22,001 பேர் உயிர் இழந்துள்ளனர்.
இன்று 27,579 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 40,21,456 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 2,39,515 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கேரளா மாநிலம் இரண்டாம் இடத்தில் உள்ளது.