சென்னை:
முன்னாள் குடியரசுத்தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பேரன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் டிவிட்டர் பதிவில், ஒன்றிய நல்வாழ்வுத்துறைச் செயலாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவரும் முன்னாள் குடியரசுத்தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பேரனுமான கேஷவ் தேசிராஜு இன்று காலை மாரடைப்பால் மறைவுற்றார் என்ற செய்தியறிந்து மிகவும் வருந்துகிறேன்.
தமது பாட்டனாரின் பிறந்தநாளிலேயே மறைவெய்தியுள்ள அவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தினர், நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
Patrikai.com official YouTube Channel