டோக்கியோ: ஜப்பானில் இன்று நடைபெற்ற பாராலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவிற்கு தங்கம், வெள்ளி என மேலும் 2 பதக்கங்கள் கிடைத்துள்ளன.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 16வது பாராலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய வீரர்கள் 54 பேர் கலந்துகொண்டு விளையாடி வருகின்றனர். இதுவரை இந்தியாவுக்கு 13 பதக்கங்கள் கிடைத்திருந்தன. இன்று நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் போட்டியில், ஒரு தங்கம் மற்றும் ஒரு வெள்ளி பதக்கங்களை இந்திய வீரர்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். இதனால் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 15 ஆக உயர்நதுள்ளது.
50மீட்டர் P4 MIXED பிஸ்டல் SH1 பிரிவில் இந்திய வீரர் மனிஷ் நர்வால் தங்கம் வென்றார்.
50மீட்டர் P4 MIXED பிஸ்டல் SH1 பிரிவில் இந்திய வீரர் சிங்ராஜ் வெள்ளி வென்றார்.