டெல்லி: நாடு முழுவதும் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கும் கல்லூரிகளில் சேர்ந்துள்ள வெளிநாட்டு மாணவர்கள் விவரங்களை உடனே சேகரித்து அனுப்பி வைக்கும்படி, யுஜிசி அவசர உத்தரவிட்டு உள்ளது.

இதுதொடர்பாக யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், வரும் செப் 15-ம் தேதிக்குள் அனைத்து பல்கலைக்கழகங்களும் தங்கள் பல்கலைக்கழகத்திலும் தங்கள் கீழ் செயல்படும் உயர்கல்வி நிறுவனங்களிலும் படிக்கும், படிப்பை முடித்த வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவர்களின் முழுமையான விபரங்களை சேகரித்து வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளது.

Patrikai.com official YouTube Channel