சென்னை: மழைநீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு வாகனங்களை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
தமிழகம் முழுவதும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. மேலும், விரைவில் மழைக்காலமும் தொடங்க உள்ளது. இதன் காரணமாக மழைநீர் சேகரிப்பை தமிழ்நாடு அரசு தீவிரப்படுத்தி வருகிறது.
அதன்படி, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வினை பொதுமக்களிடையே ஏற்படுத்திடும் வகையில், மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு வாகனங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.