காபூல், இந்தியாவுடன் பெருளாதார, வர்த்தக மற்றும் அரசியல் உறவுகளை தொடர்ந்து பேண விரும்புவதாக தாலிபான்கள் அறிவித்து உள்ளனர். செய்தியார்களை சந்தித்த தாலிபான் இயக்கத்தின் மூத்த தலைவர் ஷேர் முகமது அப்பாஸ் ஸ்டானிக்சாய் இதை தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க படைகளை விலக்கிகொள்வதாக அதிபர் ஜோ பைடன் அறிவித்ததைத் தொடர்ந்து அங்கு தாலிபான்கள் ஆட்டம் மீண்டும் தொடங்கியது. ஆப்கானின் முக்கிய நகரங்களை அடுத்தடுத்து கைப்பறிய தாலிபான்கள்தலைநகர் காபூலையும் கைப்பற்றி ஆட்சியையும் கைப்பற்றினர். இதனால், அந்நாட்டின் அதிபர் அஷ்ரப் கனி , அமைச்சர்கள் உள்பட பல அரசியல் கட்சிகளின் தலைவர்கள் காபூலில் இருந்து பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீகம் சென்று தஞ்சமடைந்தனர்.
இதையடுத்து, இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் ஆப்கானிஸ்தான் நாட்டின் மீதான தங்களது பெருளாதார, வர்த்தக மற்றும் அரசியல் உறவுகளை துண்டிப்பதாக அறிவித்ததுடன், அங்கிருந்த தங்களது நாட்டு மக்களை சிறப்பு விமானம் அறிவித்து மீட்டு வந்தன.
இநத நிலையில் இந்தியா – ஆப்கானிஸ்தான் இடையிலான பெருளாதார, வர்த்தக மற்றும் அரசியல் உறவுகளை தொடர்ந்து பேண விரும்புவதாக, அந்நாட்டின் மூத்த தலைவர் ஷேர் முகமது அப்பாஸ் ஸ்டானிக்சாய் தெரிவித்து உள்ளார். அவர் கூறியதாவது,
தெற்காசியாவில் உள்ள நாடுகளில் இந்தியா முக்கியமான நாடு. நாங்கள் அந்நாட்டுடன் மேற்கொண்டு வந்த அரசியல், பொருளாதாரம் மற்றும் வர்த்தக உறவுகளுக்கு முக்கியத்துவம் தருகிறோம். அவற்றை தொடர்ந்து பேண விரும்புகிறோம். இரு நாடுகளுக்கு இடையே வர்த்தக உறவை மேம்படுத்த நிர்மாணிக்கப்பட்ட வான் வழித்தடம் மீண்டும் திறக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.
இந்தியா ‘இந்த துணைக்கண்டத்திற்கு மிகவும் முக்கியமானது’ என்றும், தாலிபான் அமைப்பு ஆப்கானிஸ்தானின் ‘கலாச்சாரம்’, ‘பொருளாதாரம்’, ‘அரசியல்’ மற்றும் இந்தியாவுடனான ‘வர்த்தக உறவுகள்’ ‘கடந்த காலத்தைப் போல’ தொடர விரும்புவதாகவும் தெரிவித்து உள்ளது.