ட்டி

கொடநாடு எஸ்டேட்  கொலை கொள்ளை நிகழ்வின் போது மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது எப்படி என்னும் தகவல் கிடைத்துள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் 4 ஆண்டுகளுக்கு முன்பு அங்குள்ள காவலர் கொல்லப்பட்டார்.  முக்கிய ஆவணங்கள் அங்கிருந்து கொள்ளை அடிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.   சம்பவம் நடந்த போது சிசிடிவி கேமரா மற்றும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது.

சிசிடிவி கேமரா ஆப்பரேட்டராக இருந்த தினேஷ் என்பவர் சம்பவத்துக்குப் பிறகு தற்கொலை செய்து கொண்டார்.  சரியாகக் கொலை மற்றும் கொள்ளை நிகழ்ந்த நேரத்தில் மின் துண்டிப்பு எவ்வாறு ஏற்பட்டது எனக் கேள்வி எழுந்தது.  இந்த எஸ்டேட்டுக்கு தண்டையின் மின்சாரம் கிடைக்க கோத்தகிரியில் இருந்து மண்ணில் புதைக்கப்பட்ட இணைப்பு உள்ளது.

அங்கிருந்து கொடநாடு எஸ்டேட்டில் உள்ள டிரான்ஸ்ஃபார்மர் மூலம் முழுவதுமாக மின் விநியோகம் நடந்துள்ளது.  இதன்படி அங்கு 24 மணி நேரமும் மின்சாரம் கிடைக்க வாய்ப்புள்ளது தெரிய வந்துள்ளது.  இது தொடர்பாக மின் வாரிய அதிகாரிகள் அப்போதும் மின் விநியோகம் இருந்ததாகவும்  பண்ணைத்தோட்டத்தில் உள்ள டிரான்ஸ்ஃபார்மரில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் அளித்துள்ளனர்.

இந்த தகவலை அரசு விரைவில் அறிக்கையாக உதகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.  இந்த புதிய தகவல் கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.  இதையொட்டி இந்த கொலை வழக்கில் கடும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.