க்னோ

பிரபலங்களுக்காக விதிக்கப்படும் போக்குவரத்து கட்டுப்பாடு 15-20 நிமிடங்கள் மட்டுமே இருக்க வேண்டும் என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

இன்று லக்னோவில் உள்ள கேப்டன் மனோஜ் குமார் பாண்டே உ பி சைனிக் பள்ளியின் வைர விழா நிறைவுக் கொண்டாட்டம் நடந்தது.  இந்த விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்துக் கொண்டு உரையாற்றினார்.   இந்நிகழ்வின் போது அவர் முன்னாள் உபி முதல்வர் சம்பூராணானந்த் சிலை மற்றும் அவர் பெயரில் கட்டப்பட்ட அரங்கத்டை திறந்து வைத்தார்.

இந்த விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், “கேப்டன் மனோஜ் குமார் பாண்டே உ.பி.சைனிக் பள்ளி நாட்டில் முதலில் ஏற்படுத்தப்பட்ட சைனிக் பள்ளி ஆகும்.  மேலும். பெண்களுக்குக் கல்வி அளிக்கும் முதல் சைனிக் பள்ளியும் இதுதான் எனக் குறிப்பிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்த ஆண்டு முதல்முறையாக இந்த பள்ளி மாணவிகள், என்டிஏ (தேசிய பாதுகாப்பு அகாடமி)தேர்வுகள் எழுதவுள்ளனர்.   இந்தப் பள்ளியின் ஆசிரியர்களும், மாணவர்களும் மிகச் சிறந்த பாரம்பரியத்தை உருவாக்கியுள்ளனர். இதைப் போல் மற்ற சைனிக் பள்ளிகளுக்கும் நல்ல தரத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

பிரபலங்களின் பயணங்களுக்காக, போக்குவரத்தில் விதிக்கப்படும் கட்டுப்பாடுகள், பொதுமக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துகின்றன.  எனவே இந்த கட்டுப்பாடுகள் 15-20 நிமிடங்களுக்கு மேல் செல்லாமல் இருக்கும்படி நிர்வாகத்தினர் திட்டமிட வேண்டும். இத்தகைய கட்டுப்பாடுகளுக்கு இடையில் ஆம்புலன்ஸ்கள் செல்ல அனுமதிக்க வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.