சென்னை: ராஜ்யசபா தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் எம். அப்துல்லா முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் லைமைச் செயலகத்தில் இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
தமிழ்நாட்டில் 3 ராஜ்யசபா எம்.பி.க்களின் பதவிகள் காலியாக உள்ள நிலையில், அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் முகமது ஜான் மறைவான காலியான தொகுதிக்கு மட்டுமே தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி செப்டம்பர் 13ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் திமுக சார்பில், திமுகவின் வெளிநாடு வாழ் தமிழர் நல அணியின் இணை செயலாளரா எம்.எம். அப்துல்லா, கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினால் அறிவிக்கப்பட்டார்.
இதைத்தொடர்ந்து, அவர் இன்று தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் முன்னிலையில் ,சட்டப்பேரவை செயலாளரும் தேர்தல் நடத்தும் அதிகாரியுமான சீனிவாசனிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அப்போது திமுகவின் நாடாளுமன்ற குழுத் தலைவர் டி. ஆர். பாலு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாநிதி மாறன் மற்றும் திருச்சி சிவா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இந்த மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு அதிமுக சார்பில் யாரும் அறிவிக்கப்படாததால், திமுக வேட்பாளர் எம்.எம். அப்துல்லா போட்டியின்றி தேர்வாவது உறுதியாகி உள்ளது.