புதுச்சேரி:
தமிழ்நாட்டைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் பெட்ரோல் விலை குறைக்கப்பட உள்ளது.
பெட்ரோல், டீசல் விலையைப் பொறுத்தவரையில் தினசரி விலை நிர்ணயம் என்ற நடைமுறை வந்ததிலிருந்து தொடர்ந்து அதிகரித்து வந்தது. அதன்படி, இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து அதன் விலை தாறுமாறாக உயர்ந்து கொண்டே வருகிறது.
பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் விலை நூறு ரூபாயைக் கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து உயரும் பெட்ரோல், டீசல் விலையால் வாகன ஓட்டிகள் கலக்கமடைந்துள்ளனர். இந்நிலையில் தமிழக அரசின் நிதிநிலை அறிவிப்பை அடுத்து, தமிழகத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த 14ம் தேதி விலை குறைக்கப்பட்டது.
இந்நிலையில், புதுச்சேரியில் பெட்ரோல் மீதான வாட் வரியை 3% குறைப்பதற்கான அமைச்சரவை முடிவு செய்தது. இந்த முடிவுக்குத் துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார்.
இதன் மூலம், புதுச்சேரியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 2.43-ஆகக் குறைய உள்ளது.